இந்தச் சாமானியன் எப்படி நினைக்கிறான் என்று  கேட்ட பொழுது இவ்வாறு கூறினான்:

வானவில்லின் வண்ணமாக வருகிறது 
உன் நினைவு  சாகும் வரை மறக்காத மர்மமடி
என் உறவு இருந்ததன்  விளைவாக ஏக்கமடி
உன்மீது
ஏங்கி ஏங்கி துடிக்கிறது
உன்னை எண்ணியே  தவிக்கிறது
என் இதயம்
இறந்த காலம் இறந்து விட
நானும் இங்குத் தனியாக
செல்வமடி நீ எனக்கு ,
தேடிதித் துடிப்பது  என் விருப்பு
விட்டுத் தவிக்கிறது உன் சிரிப்பு
ஆராரோ ஆரிரரோ  ஆராரோ ஆரிரரோ
ஆண்டியனா பாடுகின்றேன்
அவஸ்தையில்  ஆடுகின்றேன்
அஞ்சி அஞ்சி வாழ்வதேனோ !
அடுத்தவரை எண்ணி தானோ !
என் உயிரே  என் சிரிப்பே
சிரித்து சிரித்து சிதறுகிறேன்
என் கதையை நான் நினைத்து ,
எண்ணுவதெல்லாம்  எண்ணியபடி  நடக்க
இது என்ன கனவுலகா !
காத்திருந்த காலத்திலே தந்தாயடி
மனச்சுமையை ,
யம்மாடி யம்மா யம்மா
அம்மாடி அம்மா அம்மா
செவினைகள் செத்துப் போக
சிரிப்பதடி உன் அழகு
பல்லில்லா  பெருசுகளெல்லாம்  பேசுதடி
நாம் கதையை ,
வாழ்ந்துக் கெட்ட வாழ்க்கையிலே
வேண்டுமடி உன் உறவு
என்ன இந்த  வாழ்க்கைஎன்று
ஏழனமாய் நான் கூற
வாழ்க்கை வொரு சோகமென்று  ,
இருந்தேனே நான் இங்கு ,
வாழ்க்கை வொரு சொர்கமென்று,
   வழிக் காட்டி ஏன் சென்றாய்,
என் மனமே இங்கு  என்று
என்று எந்தன் மனம் துடிக்க
சென்று விட்டாள் சொல்லிவிட்டு,
ஏனோஎந்தன்  மனம் இங்கு பாடித் தவிக்குது ,
என்றும்  உன் நினைவில்  இருந்து ,
-------அக்தர் ரூமி -----------