சாமானியனின்  குமுரலாக அரசிற்கு:



சிறு சிறு தவறுகள் பெரிதாகி ,
சிறகுகள்  இல்லா முடமாகி ,
முடக்கிவிட்டவன்  மேலோங்கி, 
முடங்கியவன்  இங்கே குழிக்குள்ளே! 
மாய்த்தவன்  இருப்பதோ மண்ணுக்குள்ளே ,
தவறு  எங்கே   மானிடா  என்னுள்ளே. 




புலம்ப வேண்டாம்  நீ  இங்கே .!
உன் எதிர்காலம்  உனக்குள்ளே! 
வாழ்ந்தழிவது எங்கள் பண்பில்லை!
வளர்ந்தோங்குவது  அவனில்லை!



வியாபாரம்  என்னும் விலை நிலத்தில்,
விருந்தோம்பலை நீ நாடினால் ,
 நீ என்ன  மன்னனா இந்நாட்டில் !




வளர்ந்து வருகிறதா? பொருளாதாரம்
புரிந்து முடியாவில் , இந்தவதாரம் 

தினம் உழைப்பவன் எடுப்பதோ தசாவதாரம் !
பொருளாதாரக்கொள்கைத் தேவையில்லை,
பண முதலாளிகள்  இல்லையேல்  என்தொல்லை,


நாங்கள்    இருக்கின்றோம்  உனக்கு 
இனிக் கவலை உனக்கெதுக்கு, 
கவலையைத் தூக்கி எரிந்து விடு,
கணிசமாக நீ உயர்ந்து விடு,


விட்டுவிடு அவர்களின் பொருளாதாரக்கொள்கையை,
பண முதலைகளின்  ஒப்பந்தம் வேண்டா உனக்கு ,
தெளிந்து வந்து விடு எதிர்க்காலம் இருக்கு, 
 இனி  நீ !இந்தியாவின்  எதிர்காலத்தை  நோக்கு,



பாவம் என்பதில் பயனில்லை, 
பயத்தால்  ஏதும் நிகழவில்லை,
இனி  விலைப்பொருள்கள்  இருக்கின்றது, 
கவலையில்லை ,



விட்டுவிடு  அவன் கூட்டணியை, 
நாம் திரட்டுவோம் ஒரு அணியை,
நமக்கென்று ஓர் பொருளாதாரம் 
தற்சார்புக்கொள்கைக்கே  முன்னுதாரணம்,


கலங்கிவிடாதே!  அவர்கள் காட்டும் வித்தைக்கு!  
விலகிவிடாதே  !தேர்தலுக்குப்பின்  !
எங்களை விட்டு...
நீயும் போடு ,அவர்களின்   சுரண்டலுக்கு பூட்டு !
நாட்டு மக்களின்  உழைப்பைக்கொண்டு  முன்னேறிக்காட்டு ,

கீழடிப்பொருட்கள்

....



தென்  திசையில் ஒரு  இனமுண்டு ,
தனியே   அவற்கொரு   குணமுண்டு, 
செல்வ   வளங்களை பயன்படுத்திக்கொண்டு, 
நம் நாட்டு மக்களின் முயற்சியைக்கொண்டு ,
 பன்னாட்டுக்கிடையில் தனியே 
நின்று வென்றுக்காட்டு 



என்றும் வீழ்வதல்ல  என்னினம்! 
விவசாயம் செய்வோம் தினம் தினம்! 
வேட்டையாடி களையெடுப்போம் நல்தினம்!
விவசாயம் செய்வோம் தினம் தினம்! 

 -----------------------------அக்தர்  ரூமி--------------------------------------------------


விவசாயியை வாழ வைப்போம்!!!
பொருளாதாரத்தில் உயர்ந்துக்காட்டுவோம்....