ஓடையில்மீனாய்க் கண்டேன் ;ஒதுங்கையில் நிழழாய் கண்டேன் .அருவியில் நீராய் கண்டேன் ;தூக்கத்தில் கனவாய் கண்டேன்;தோட்டத்தில் பூவாய்;இப்படித்தோன்றும் இடம்எல்லாம் உன்நினைவுகள்.இத்தனையும்,உன்னிடம் சொல்ல ஆசை,ஆனால் நீ மறுத்தால் அதுவே என் மரண ஓசைஎன் மூளையில் ஒரு பக்கம் உன் முகம், மறுபக்கம் உன்நினைவுகள் , என அல்லாடும் என் உணர்வுகளை;உன்னிடம் சொல்ல நினைக்கிறேன், தனிமையில் தவிக்கின்றேன்.என்னால் முடியவில்லை ;ஆனால் தவறான முடிவை எடுக்க என் மனது விரும்பவில்லை காத்திருப்பேன் காலமெல்லாம் கலங்காமல் உன் நினைவுகளோடு ,நீ என்னை புரிந்துக் கொள்ளும் வரை, இதை நான் உன்னிடம் சொல்ல வில்லை என்றாலும் ,இதை நீ நன்றாகவே அறிவாய் என எனக்குத் தெரியும், ஏனென்றால் நான் கண்டேன் உன் கண்களில் என் உருவத்தை , உன்னைக் கண்ட பின்பு வருடங்கள் மாதங்களானது ,மாதங்கள் வாரங்கள் ஆனது, வாரங்கள் வருடி நாட்கள் ஆனது ,நாட்கள் கரைந்து நிமிடமானது,நிமிடங்கள் உன்னைக் காணும் போதெல்லாம் உருகி நொடிகளானது ஏன் செய்வேன்! இப்பொழுது தவிக்கிறது என் நெஞ்சம்!!! துடிக்கிறது உன்னை நினைத்து ...என் இதயத் துடிப்பு உன் பெயரில் துடிப்பதை நிறுத்துவதற்கு முன் உன் இதழ்களின் முடிவைக்கான விரும்புகிறேன். நான் உன்னைத் தினமும் தழுவு கின்றேன் காமத்தில் அல்ல என் கண் இமைகளில் ,கருவிழிகளில் ,உன், கொஞ்சும் இதழ்களோடு; கொஞ்சுவேன்! உன்னை , உன்னையே உலகமாய் நினைத்து துடிக்கும் என் இதயத்தை ,நிறுத்தி விடாதே !தாங்காது என் இதயம் ,என் உலகில் உதிக்காது சூரிய உதயம்! கருங்கல் பாறை அல்ல உன் இதயம் உன் நினைவுகளால் என் வாழ்வில் உதிக்கிறது சூரிய உதயம் நாளைய பொழுதும் உன் நினைவுகளுடன் தான், உறங்குகிறேன் உன்னை நினைத்தே, காத்திருக்கிறேன் !உன் பதிலுக்காக கலங்கடித்து விடாதே ,இதுக்கவிதையா அல்லது கவி நடையா என்பதை நான் அறியா ?தடம் மாறியது என் இதயம்! நீ தர வேண்டும் உன் இதயம்! காத்திருப்பேன் உனக்காக என் கவிதைப்பூவே!மறந்து விடாதே என்னை ,தந்து விடாதே வேறொருவருக்கு உன்னை ,இப்படிக்கு உன் நினைவுகளோடு கரையும் ..., உன் அன்பு %%% ... ----------------------------------------------------- ரூமி ---------------------------------------------------------------x
0 Comments