சாமானியனின் பாட்டு :




பயங்கர வாதத்தை ஒழிப்போம் !பாசிச  கொள்கையை அழிப்போம்!

இது ரத்தம் சிந்த பிறந்த மண் அல்ல ;சிந்த வைப்பனை சிதரடிக்கும் மண்!
ஒற்றுமை  எங்கள் உயிர் மூச்சு !அதை குலைக்க நினைக்கும் உன்  தந்திரம் செத்துப் போச்சு!

மறந்து விடாதே இது பகுத்தறிவு நிறைந்த மண்!  
 இங்கே பகுத்தறிவாளர்கள் வாழ்ந்த  மண்   !


நீ மதவெறியை திணிக்க நினைத்தால்  உன்னை மாற்றி விடுவோம்! இங்கே கசாயம் பூசும் உன்  வேலைகளும்   செல்லுபடியாகாது


செல்லுபடி யாகா ! செல்லுபடி யாக! இங்கே நீ செய்யும் யோகா... 


ஓடி விடு !நீ ஓடி விடு !வந்தவழி  அறிந்தோ டிவிடு ...
திருந்தி விடு !நீ திருந்தி விடு  நாங்கள் திருத்தும் முன்,  நீ திருந்தி விடு !

 நிறுத்தி விடு! நீ நிறுத்தி விடு !உன் பயங்கர வாதத்தை  நிறுத்தி விடு !



உன் கொள்கைகள் இனி செல்லுபடி யாகா !
வேற்றுமையில் ஒற்றுமை எப்பொழுதும் நீங்கா !
 இதை நீ அறியவில்லையா மாங்கா !


கண்டாயா ஆற்று நீர் ஊற்று நீருக்கு  முன் தோன்றிய கடல் நீருக்கருகில் எங்கள் ஒற்றுமையை!!!...



வீழ்வேனென்று நினைத்தாயோ மடையா? மக்கிப்போய்  மண்ணில் ,

மண்புழுவாய் உரமாகுபவர்கள் அல்ல நாங்கள் இம்மண்ணின் பாதத்தை 
தழுவி வந்தவர்கள்  நாங்கள் 


விதையாகுவோமே  தவிர வீழ மாட்டோம் !

பாரதி என் பைந்தமிழ் புலவன் .

இந்நாடு பழங்காலத்திலேயே   பழம்பெரும் வரலாற்றை கொண்டு விளங்கிக் கொண்டிருந்த நாடு .


உன் சாதிப்போர்வையை கிழிக்க தயாராகிறது  எங்கள் சமூதாயம். எங்களைப்பொறுத்த வரையில்
 இம்மண்ணில் இரண்டே  சாதி ,


அது ஆண்சாதி !! மற்றும் பெண் சாதி!

உன் சாதிச் சாக்கடை எங்களின்  பகுத்தறிவால் நிச்சயம் சீராக்கப் படும்...


வாழ்க தமிழ்! வளர்க்க நின் புகழ் !
                                                                                                    ---------ரூமி